செய்திகள்

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலாவின் அசத்தல் நடனம்: வைரலாகும் பாடல்!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள குண்டூர் காரம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். நடிகைகள் ஸ்ரீ லீலா, பூஜா ஹக்டே, நடிகர் ஜகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இருந்தது.  

இந்தப் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன், நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியானதும் பின்னர் பூஜா ஹெக்டே மட்டும் விலகியதாக தகவல்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீ லீலா உடன் மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் முதல் பாடலான தம் மசாலா பாடல் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

இதில் ஸ்ரீலீலா, மகேஷ்பாபு நடனம் எக்ஸில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT