விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மேலும், விஜய்யின் 68-வது படத்தின் பெயர் கோட் (G.O.A.T. - Greatest Of All Times) என்று தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இத்தகவலை தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். தற்போது இந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.