செய்திகள்

வசூல் வேட்டை நடத்தும் பதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷாருக் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

DIN

ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர். 

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 

பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. 

இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக, பதான் படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் வெளியாகியது. ஆனாலும் எதிர்பார்க்காத வகையில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் முதல் 6 நாள்கள்(திங்கள்கிழமை வரை) முடிவில் பதான் திரைப்படம் ரூ. 591 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் ரூ. 367 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 224 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பதான் திரைப்படத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், இரண்டாம் வார முடிவிலேயே ரூ.1,000 கோடி வசூலை கடந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT