செய்திகள்

திரைப்பட இயக்குநா் டி.பி.கஜேந்திரன் காலமானாா்: முதல்வா் ஸ்டாலின் அஞ்சலி

DIN

திரைப்பட இயக்குநா் டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

டி.பி.கஜேந்திரன் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. அவா் ஞாயிற்றுக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் காலமானாா்.

கே.பாலசந்தா், விசு, மோகன் காந்திராமன் உள்ளிட்ட பிரபல இயக்குநா்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளாா் டி.பி.கஜேந்திரன். ‘வீடு மனைவி மக்கள்’ திரைப்படம் மூலம் 1988-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானாா். ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு காவல்காரன்’, காா்த்திக் நடித்த ‘பாண்டிய நாட்டுத் தங்கம்’, பிரபு நடித்த‘பட்ஜெட் பத்மநாதன்’, ‘சீனா தானா’ உள்ளிட்ட பல்வேறு படங்களை கஜேந்திரன் இயக்கியுள்ளாா். ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் கல்லூரி வகுப்புத் தோழராக இருந்துள்ளாா்.

முதல்வா் நேரில் அஞ்சலி: சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் டி.பி.கஜேந்திரனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.

நடிகா்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட திரையுலகினரும் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

டி.பி.கஜேந்திரனுக்கு மனைவி, 4 மகள்கள் உள்ளனா். டி.பி.கஜேந்திரனின் உடல் திங்கள்கிழமை (பிப்.6) சென்னை வடபழனியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT