செய்திகள்

சமந்தா பகிர்ந்த தன்னம்பிக்கை பதிவு! 

நடிகை சமந்தா பகிர்ந்த தன்னம்பிக்கை பதிவு வைரலாகி வருகிறது. 

DIN

தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களிலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை சமந்தா தரப்பு மறுத்திருந்தது. இந்த நிலையில்தான், சமந்தாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற வெப் தொடரில் நடிக்க ஏற்கனவே சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார். 

சமந்தாவுடன் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்த ராகுல் ரவீந்திரன் அடிக்கடி தன்னிம்பிக்கை ஊட்டும் மடல்களை எழுதியனுப்புவார். அவர் சமீபத்தில் எழுதிய பதிவை சமந்தா பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவிற்கு 1.6 மில்லியன் லைக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.சமந்தாவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் கமெண்ட்டில் ஊக்கம் கொடுத்து வருகின்றனர். 

சமந்தா பகிர்ந்த ராகுல் ரவீந்திரனின் பதிவில் கூறியிருந்ததாவது: 

நன்றாக மூச்சினை இழுத்துவிடு பாப்பா. விரைவில் இது சரியாகுமென நான் உறுதி கூறுகிறேன். கடந்த 7-8 மாதங்கள் மிகவும் மோசமான நாட்களை கடந்து வந்துள்ளாய். அதை நீ மறந்து விடாதே. அந்த நேரத்தில் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டாயோ அப்படியே இனியும் எதிர்கொள். நீ யோசிப்பதை நிறுத்தி விட்டாய், நீ உன்னையே ஏமாற்றிக்கொண்டாய், மற்றவர்களுக்கு முன்பாக தைரியமாக அடி எடுத்து வைத்து நடந்தாய். இதை நீ செய்து முடித்த விதம் அற்புதம். நீ இப்போது செய்து கொண்டிருப்பதை நினைத்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன். நீயும் இதை பெருமிதமாக நினைக்க வேண்டும். நீ வலிமையானவள். ஆக்டோரடில் விளையாட்டை விளையாடு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

மத்திய கல்வி அமைச்சகம் முன் என்எஸ்யுஐ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT