செய்திகள்

'என்னை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்..’: பிரபல நடிகர் உருக்கம்

தன்னை துன்புறுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள் என பிரபல நடிகர் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

DIN

தன்னை துன்புறுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள் என பிரபல நடிகர் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

‘ஜோசப்’, ‘ஒன்’, ‘நயாட்டு,’ ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோஜூ ஜார்ஜ் மலையாளத்தில் முக்கியமான நடிகர்.

தற்போது, இவர் நடிப்பில் ‘இரட்டா’ என்கிற படம் வெளியாகியுள்ளது. இதில் இரட்டை வேடங்களில் ஜோஜூ நடித்துள்ளார். 

இந்நிலையில், அவர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருந்தாலும் ’இரட்டா’ புரோமோஷனுக்காக மீண்டும் வந்தேன். ஆனால், சிலர் தொடர்ந்து என்மீது அவதூறுகளை சுமத்துகிறார்கள். என்னை துன்புறுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள். என் பணியில் மிகக்கடினமான காலகட்டத்தில் உள்ளேன். என்னைக் கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜோஜூ ஜார்ஜ் கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளத்தில் உள்ள வாகமனில் நடைபெற்ற ஜீப் ரேஸில் அதிவேகமாக  ஜீப்பை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. பின், அதையொட்டிய விமர்சனங்களும் எழுந்ததால்  அவர் மீது விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ரேஸில் பங்கேற்றதாகவும் ஜீப் ரேஸ் நடைபெற்ற இடம் விவசாயம் நிலம் என்பதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT