செய்திகள்

ஆங்கிலத்தில் வெளியாகும் ‘காந்தாரா’

DIN

காந்தாரா திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட படக்குழு முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

ரூ. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வெளியான இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்தியா முழுவதும் காந்தாரா படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து காந்தாரா 2ஆம் பாகம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே ப்லிம்ஸ் சமீபத்தில் தெரிவித்த நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தைப் போல் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்காக காந்தாரா திரைப்படத்தை ஆங்கிலத்தில் வெளிநாடுகளில் திரையிட தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT