செய்திகள்

’பா.இரஞ்சித் நல்ல கலைஞர். ஆனால்...’: இயக்குநர் மோகன்.ஜி

பகாசூரன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மோகன்.ஜி சாதி குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

DIN

இயக்குநர் மோகன்.ஜி  இயக்குநர் பா.இரஞ்சித்தைப் பாராட்டியுள்ளார்.

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பகாசூரன் வருகிற பிப்.17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மோகன்.ஜியிடம் பா.இரஞ்சித் குறித்து கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு மோகன்.ஜி, ‘பா.இரஞ்சித் தன் மக்களுக்கான உரிமையைப் பேசுகிறார். அது எனக்குப் பிடித்திருக்கிறது. சார்பட்டாவிலேயே தான் சிறந்த கலைஞர் என நிரூபித்துவிட்டார். இன்னும் அவர் பெரிய இடத்திற்கு போவார். ஆனால், நான் திரௌபதி எடுத்த காரணத்திற்காக  ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை எடுத்தார். இந்த மாதிரி தடம் மாற வேண்டாம். அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்னையைப் பேசினால் போதும் என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

காற்று மாசு: பிஎஸ்- 4 ரக தரநிலைக்கு கீழான 500 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சமய்பூா் பத்லியில் எஸ்யுவி வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

SCROLL FOR NEXT