முகப்பு
செய்திகள்

‘வாத்தி’ மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வாத்தி படத்தின் முதல் மூன்று நாள்கள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 20 பிப்ரவரி 2023, 12:07 pm IST
பகிர்:

வாத்தி படத்தின் முதல் மூன்று நாள்கள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' வெற்றிப் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள 'வாத்தி' படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியிடப்ப்பட்டது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

Advertisement

Advertisement

உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், முதல் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் ரூ.47 கோடிக்கும் மேல் வாத்தி படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் ரூ. 16.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.