முகப்பு
செய்திகள்

அருண் விஜய்யின் ‘பார்டர்’ வெளியீடு ஒத்திவைப்பு

அருண் விஜய் நடிப்பில் உருவான பார்டர் படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 பிப்ரவரி, 2023 at 12:47 PM
பகிர்:

அருண் விஜய் நடிப்பில் உருவான பார்டர் படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘பார்டர்’ திரைப்படம் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.

தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிச் சென்றபடியே இருந்தது.

Advertisement

இதற்கிடையே இப்படம் 2023, பிப்.24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

அருண் விஜய்யுடன் ரெஜினா காசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி,எஸ் இசையமைத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.