‘தனுஷ் 50’ படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?
நடிகர் தனுஷின் 50-வது படத்திற்கான இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள்‘தனுஷ் 50’ படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?
நடிகர் தனுஷின் 50-வது படத்திற்கான இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்.17ஆம் தேதி திரையரங்களில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.
சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.
முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மரியான், ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.