செய்திகள்

நடிகை ஆலியா பட்டின் புதிய நண்பர் யார் தெரியுமா?

பிரபல ஹிந்தி நடிகை ஆலியா பட் தனது புதிய நண்பரை அறிமுகப்படுத்தியுள்ளார். 

DIN

ஹிந்தியில் பிரபலமான ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வந்தனர். இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் மாதம் வெளியானது. பிறகு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

நவம்பரில் குழந்தையும் பிறந்தது. ராஹா எனும் பெயரை வைத்தனர். தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். கங்குபாய் கைத்யவாடி திரைப்படத்தில் நடித்ததற்காக ஆலியாவிற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிக்கைக்கான விருது கிடைத்தது. ரன்பீர் கபீருக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. அவருக்கு பதிலாக ஆலியாவே அந்த விருதினையும் பெற்றார். 

தற்போது ஹார்ட் ஆஃப் ஸ்டோன் எனும் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று விருது பெற்றவுடன் இன்ஸ்டாகிராம் தன்னுடைய புதிய நண்பர் என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT