செய்திகள்

பிருத்விராஜின் ‘கடுவா’ தமிழில் வெளியீடு! 

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜின் ‘கடுவா’ திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது. 

DIN

கடந்தாண்டு ஜூலை மாதத்தில் மலையாளத்தில் வெளியான பிருத்விராஜின் ‘கடுவா’ திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. ஷாஜி கைலாஸ் இயக்கிய இந்தப் படத்தில் சம்யுக்தா நாயகியாக நடித்திருந்தார். ஓடிடியிலும் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலானது குறிப்பிடத்தக்கது. 

90களில் நடைபெறும் கதை. பிருத்விராஜ் (வியாபாரி) மற்றும் விவேக் ஓபராய் (காவல்துறை அதிகாரி) இருவருக்கும் இடையே நடைபெறும் ஈகோ கதையாக உள்ளது. தமிழ் ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து படக்குழு தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளது. 

இந்தத் திரைப்படம் மாரச் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் அல்போன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘கோல்டு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் வெளியான ‘காப்பா’ திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் கடுவா திரைப்படம் அவருக்கு மீண்டும் நல்ல பெயரினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT