செய்திகள்

'குழந்தைகளிடம் பேசுவதில் வல்லவர் சிவகார்த்திகேயன்...': வைரலாகும் விடியோ! 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ரோஹிணி குழந்தையுடன் பேசும் விடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

DIN

மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன்.

பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிவகாரத்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சீன்னா...சீன்னா’ பாடல் வெளியானது.

மோகோபாட் காமிரா இதற்குமுன் விஜய்யின் பீஸ்ட், கமல் ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்த்தி நடித்துவரும் ஜப்பான் படத்திலும் இது பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் படத்திலும் இந்த மோகோபாட் காமிரா பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் விடியோ வெளியானது. 

இந்தப்படத்தில் ஆர்ஜே ரோஹிணியும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவெ எல்கேஜி, இப்படை வெல்லும், கந்தசாமி படங்களில் நடித்துள்ளார். இவரது குழந்தையுடன் சிவகார்த்திகேயன் க்யூட்டாக பேசியுள்ளார்.  

இதையும் படிக்க: பதான் ரூ.1,000 கோடி வசூல்!

நடிகை ரோஹிணி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “குழந்தைகளின் உரையாடல்களை புரிந்து கொள்வதில் வல்லவர். எனது குழந்தை சிவகார்த்திகேயனிடம் அன்பான நேரத்தை செலவிட்டாள்” என கூறியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுடன் தொடர்புடைய மியூல் கணக்கு மோசடி கும்பல் கைது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

நிலச்சரிவால் இடிந்த வீடு! 3 பேர் உயிரிழப்பு! | Darjeeling | Landslide | Rain

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

SCROLL FOR NEXT