செய்திகள்

'செம்பருத்தி' நாயகியின் புதிய சீரியல் 'மிஸ்டர் மனைவி'

மாறுபட்ட குணம் கொண்ட இரு இதயங்கள் காதலில் இணைந்து அவர்கள் சந்திக்கும் சூழல்களை அடிப்படையாக வைத்து 'மிஸ்டர் மனைவி' என்ற தொடர் அமைக்கப்பட்டுள்ளது.

DIN

சன் தொலைக்காட்சியில் 'மிஸ்டர் மனைவி' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை ஷபானா ஷாஜஹான். இவர் இதற்கு முன்பு விஜயதசமி எனும் தொடரில் நடித்துள்ளார். எனினும் 'செம்பருத்தி' தொடரில் பார்வதி என்ற முதன்மை பாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர். 

'செம்பருத்தி' தொடர் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இந்தத் தொடர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளது. 

இந்தத் தொடருக்கு அடுத்தபடியாக ஷபானா எந்த தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள 'மிஸ்டர் மனைவி' என்ற பாத்திரத்தில் அவர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள 'மிஸ்டர் மனைவி' தொடரின் முன்னோட்ட விடியோ மூலம் இது உறுதியாகியுள்ளது. 

இந்தத் தொடரில் ஷபானாவுக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடிக்கிறார். தெலங்கானாவைச் சேர்ந்த இவர், தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்துள்ளார். முதல்முறையாக தமிழ் சின்னத் திரையில் அறிமுகமாகிறார். 

மாறுபட்ட குணம் கொண்ட இரு இதயங்கள் காதலில் இணைந்து அவர்கள் சந்திக்கும் சூழல்களை அடிப்படையாக வைத்து 'மிஸ்டர் மனைவி' என்ற தொடர் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்தத் தொடர் எப்போதுமுதல் ஒளிபரப்பாகும் என்ற தகவலை சன் தொலைக்காட்சி விரைவில் அறிவிக்கும். 

ஜீ தமிழுக்கு அடுத்தபடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஷபானா நடிக்கவுள்ளதால், 'மிஸ்டர் மனைவி' தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT