'சில நொடிகளில் உயிர் தப்பித்தது’: நடிகர் விஷால்
‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சில நொடிகளில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சில நொடிகளில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டினார்.
அதனையடுத்து, தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.
Advertisement
'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ஜெயம் ரவியின் ‘அகிலன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது.
அப்போது, காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட லாரி நிற்காமல் செட்டில் வேகமாக மோதும் விடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, விஷாலின் அருகிலேயே லாரி சென்றது.
இதுகுறித்து நடிகர் விஷால் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ சில நொடிகளில் சில அங்குலங்களில் நான் உயிர் பிழைத்தேன். கடவுளுக்கு நன்றி. இந்தச் சம்பவத்தால் என் கால் மறத்துப்போனது.’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.