தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் இந்திய அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் நடிகர் விஜய் உடன் நடித்த வாரிசு திரைப்படமும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றி பெற்றது. இதனால் இவருக்கான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது.
அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து விட்டார். ‘குட்ஃபை’ எனும் இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. அடுத்த ஹிந்திப் படத்தில் சித்தார்த் மல்லோத்ராவுடன் இணைந்து நடித்துள்ள மிஷன் மஜ்னு திரைப்படமும் வெளியானது.
தற்போது ரன்பிர் கபீருடன் ‘அனிமல்’ படத்திலும், அல்லு அர்ஜூனுடன் ‘புஷ்பா 2’ படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: மழையில் நனைந்தபடி... வைரலாகும் அமலா பாலின் புகைப்படங்கள்!
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் அமிதாப்புடன் நடித்த படத்திற்காக சிறந்த புதுமுக நடிகை விருதினை வென்றார்.
இந்த விழாவில் ராஷ்மிகா அணிந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.