செய்திகள்

சித்தார்த் - அதிதி ஜோடி அசத்தல் நடனம்... வைரல் விடியோ!

சித்தார்த் - அதிதி இருவரும் இணைந்து நடனமாடிய ‘ரீல்ஸ்’ விடியோ வைரலாகி வருகிறது.

DIN

சித்தார்த் - அதிதி இருவரும் இணைந்து நடனமாடிய ‘ரீல்ஸ்’ விடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் கதாநாயகனாக நடித்தார். முக்கியமான நடிகராக வலம் வந்தவர் அடுத்தடுத்த தோல்விப் படங்களைக் கொடுத்ததால் தற்போது மார்க்கெட் இழந்துள்ளார்.

மேலும், தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.

அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.  இவரும் சித்தார்த்தும் காதலிப்பதாக தகவல் பரவி வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளுக்கு சென்றனர். 

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சித்தார்த் - அதிதி இருவரும் இணைந்து நடனமாடும் ’ரீல்ஸ்’ விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT