செய்திகள்

சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்: விக்னேஷ் சிவன் 

நடிகர் அஜித்குமாரின் 'ஏகே 62' படத்தினை இயக்கும் வாய்ப்பையளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். 

DIN

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ​வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. 

அஜித்குமார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘ஏகே 62’ படத்தின் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் அதன் படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம். 

இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: 

எனது அடுத்த முக்கியமான பெரிய வாய்ப்பான ஏகே 62 படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த பெரிய பொறுப்பினையளித்த அஜித் சார், லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. சுவாரசியமான புத்தாண்டை எதிர் நோக்கியுள்ளேன். நீங்கள் வைத்திருக்கும் சிறிய ஒவ்வொன்றினை நினைத்தும் மகிழ்ச்சியடைவீர்கள் என நம்புகிறேன். வாழ்க்கையில் சிறிய விஷயங்கள்தான் நம்மை மகிழ்ச்சியாக்குகிறது. அதில் கவனம் செலுத்தி மகிழ்ந்திருங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்து விழுந்துவிடும். 2023 சிறப்பாக இருக்க வாழ்த்துகள். அன்புடன் விக்கி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT