ஹோம்பலே பிலிம்ஸின் இணை நிறுவனர் விஜய் கிரகந்தூர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா ஆகிய படங்கள் இந்திய அளவில் வெற்றிப்படங்களாக அமைந்தன.
கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமா பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த இரண்டு படங்கள் மட்டும் ரூ.2000 கோடி வசூல் செய்து சானை படைத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா படம் ரூ.400 கோடி வசூல் செய்தது.
ஹோம்பலே நிறுவனம் எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடி முதலீடு செய்து, பிரம்மாண்ட படங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஹோம்பலே நிறுவனம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா, பிரபாஸின் சலார், பகத் பாசலின் தூமம் போன்ற திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.