ஜீ தமிழ் தொடர் கதாபாத்திரங்கள் 
செய்திகள்

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2022: தேர்வான சீரியல்கள் எவை?

ஜீ  தமிழ் குடும்பம் விருதுகள் கட்நத 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மக்களிடம் எடுக்கும் வாக்கெடுப்பின்படி மிகவும் விருப்பமான தொடர், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

DIN

ஜீ  தமிழ் குடும்பம் விருதுகள் கட்நத 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மக்களிடம் எடுக்கும் வாக்கெடுப்பின்படி மிகவும் விருப்பமான தொடர், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

வெள்ளித் திரையில் நடிப்பவர்களுக்கு விருதுகள் வழங்கி பார்த்திருப்போம். அதற்கு சற்றும் சளைக்காத வகையில், அதே அளவு பிரமாண்டமாக சின்னத் திரை நடிகர்களுக்கும் தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ஜீ நிறுவனம் ஜீ ''தமிழ் குடும்பம் விருதுகள்'' என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது. 

கரோனா காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மிகப்பெரிய வீட்டில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த ஆண்டை தவிர்த்து மற்ற ஆண்டுக்கான விருதுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வழங்கப்படும்.

அந்தவகையில் இந்த ஆண்டு (2022) தமிழ் குடும்பம் விருதுகள் 2022 விருதுகளுக்கு தேர்வான சீரியல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பிடித்த தொடருக்கு பார்வையாளர்கள் வாக்களிக்கலாம். மக்களிடம் பெறும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த தொடர் தேர்வு செய்யப்படும். அந்தவகையில் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள தொடர்களின் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாரி, ரஜினி, பேரன்பு, தவமாய் தவமிருந்து, நினைத்தாலே இனிக்கும், வித்யா நம்பர் 1 ஆகிய தொடர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  இதில் பிடித்த தொடருக்கு மக்கள் வாக்களிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT