செய்திகள்

‘முதல்பாதி திரைப்படம் யாருக்கானது?’- துணிவு குறித்து இயக்குநர் பேட்டி! 

துணிவு திரைப்படம் எப்படியிருக்குமென இயக்குநர் வினோத் பேட்டி  அளித்துள்ளார். 

DIN

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.  

துணிவு படத்தின் டிரைலர் 56 மில்லியன் (5.6 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது. மேலும் திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரைய்ரங்குகளில் வெளியாகும். மேலும் முதல்நாள் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இயக்குநர் வினோத் ஒரு நேர்காணலில், “முதல் பாதி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காகவும் இரண்டாம் பாதி திரைப்படம் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும்” என கூறியுள்ளார். இதன்மூலம் படம் இளைஞர்களுக்கு மட்டுமின்றி குடும்பங்களுக்கும் பிடிக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT