செய்திகள்

ரஜினியுடன் மோகன்லாலின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா? 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமாரின் தோற்ற புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்தப் படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் முத்துவேல் பாண்டியன். 

விருவிருப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது. ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை (ஜன.8) சென்னையில் தொடங்கி இரண்டு நாள்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

நீ சிரித்து நான் பார்த்ததில்லை! எப்ஸ்டீன் பற்றி கேட்ட பெண் செய்தியாளருக்கு டிரம்ப் பதில்!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 35 ஆக உயர்ந்த பலி: 393 பேர் காயம்!

விஜய்யை புகழ்ந்து முருகன் பாடல்! மன்னிப்பு கோரினார் பாடகர் வேல்முருகன்!

தனுஷுக்கு வில்லனாக மம்மூட்டி?

SCROLL FOR NEXT