செய்திகள்

தனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுதான்..

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்.17 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும்  தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்திற்கு ‘ராயன்’ என தலைப்பு வைத்துள்ளதாகவும் வடசென்னையை மையமாக வைத்து ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடிக்க உள்ளதாகவும் தகவல்.

முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சி

கல் குவாரியை மூடக் கோரி கிராமத்தினா் போராட்டம்

குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள்

வத்தலகுண்டில் விவசாயி கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT