நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகும் ‘டைட்டானிக்’
உலகையே ரசிக்கச் செய்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகையே ரசிக்கச் செய்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடிகர்கள் லியோனர்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டைட்டானிக்.
இதையும் படிக்க | கவனம் ஈர்க்கும் கள்வன் டீசர்
Advertisement
Advertisement
அண்டார்டிகா பகுதியில் பயணப்பட்ட டைட்டானிக் எனும் கப்பலில் நிகழும் இந்த காதல் கதைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 11 ஆஸ்கர் விருதுகளையும், கோல்டன் குளோப் விருதுகளையும் வென்ற இந்தத் திரைப்படம் ஹாலிவுட் உலகின் முக்கியமான திரைப்படமாக சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மெருகேற்றப்பட்டுள்ள இந்தப் படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 4கே 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட உள்ள இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.