செய்திகள்

தனுஷின் ‘வாத்தி’: 2வது பாடல், ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி படக்குழு அறிவித்துள்ளது. 

DIN

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘வாத்தி’ திரைப்படத்தின் 2வது பாடல் ஜன.17ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் வாழ்த்துகளையும் படக்குழு தெரிவித்துள்ளது.

இசை வெளியீட்டு விழா பிப்ரவரியில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT