செய்திகள்

மீண்டும் ஒரு பணப்பெட்டி! பிக் பாஸ் வைத்த ‘ட்விஸ்ட்’

பிக் பாஸ் போட்டியில் இரண்டாவது பணப்பெட்டி இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

DIN

பிக் பாஸ் போட்டியில் இரண்டாவது பணப்பெட்டி இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதி வாரத்தில் 6 பேர் மட்டுமே தகுதிபெற்றனர். இன்னும் 4 நாள்களில் இந்த சீசன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், நேற்று பணப்பெட்டிக்கு பதிலாக இம்முறை பணமூட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இறுதி வாரத்தில் உள்ள 6 போட்டியாளர்களில் ஒருவர் கொடுக்கப்பட்டுள்ள பணத்துடன் வெளியேற விருப்பப்பட்டால் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த பணமூட்டையிலுள்ள தொகை தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடக்க தொகையான ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு கதிரவன் வெளியேறியது சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இன்று பணப்பெட்டியை அறிமுகம் செய்துள்ளனர். இதை எடுத்துக் கொண்டு போக விருப்பப்படுபவர் போகலாம் என்று பிக் பாஸ் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முந்தைய சீசன்களில் ஒரே ஒரு பணப்பெட்டி மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு ஒரு போட்டியாளருக்கு மட்டுமே பணத்துடன் வெளியேறும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இம்முறை இரண்டாவது பணப்பெட்டி அறிமுகம் செய்துள்ளது சக போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT