செய்திகள்

'என்ன ஒரு பிரம்மாண்டம்...’ ஜிகர்தண்டா - 2 குறித்து எஸ்.ஜே.சூர்யா

ஜிகர்தண்டா-2 படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

ஜிகர்தண்டா-2 படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா - 2 (டபுள் எக்ஸ்)  படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

டீசரில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் மிரட்டலான தோற்றத்தில் வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ 36 நாள் ஒரே கட்ட படப்பிடிப்பு. என்ன ஒரு கான்செப்ட். என்ன ஒரு செட். என்ன ஒரு போட்டோகிராஃபி, என்ன ஒரு பிரம்மாண்டம். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி கார்த்திக் சுப்புராஜ். லாரன்ஸ் என்ன ஒரு மனிதர்! நான் அருகில் பார்த்த அற்புத உள்ளம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT