இயக்குநர் எச்.வினோத் 
செய்திகள்

வசூல் குறித்து தயாரிப்பாளர்களே பொய் சொல்கிறார்கள்: எச்.வினோத்

படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர்களே பொய் சொல்கிறார்கள் என இயக்குநர் எச்.வினோத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

DIN

படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர்களே பொய் சொல்கிறார்கள் என இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இந்த படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில்  இதுவரை ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வட அமெரிக்காவில் மட்டும் துணிவு திரைப்படம் ஒரு மில்லியன் டாலர்(இந்திய மதிப்பின்படி ரூ. 8.16 கோடி) வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக அங்கு படத்தை வெளியிட்ட சரிகம சினிமாஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாரிசு இதுவரை ரூ.210 கோடி வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில்,நேர்காணல் ஒன்றில் பங்குபெற்ற இயக்குநர் எச்.வினோத் ‘பாக்ஸ் ஆஃபிஸ் விளையாட்டிற்காக தயாரிப்பாளர்களே பொய் சொல்ல துவங்கிவிட்டனர்’ என அதிரடியான கருத்தைக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT