செய்திகள்

விஷால் படத்தில் இணைந்த ‘புஷ்பா' பட வில்லன்! 

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இணைந்துள்ளார் புஷ்பா பட வில்லன் சுனில். 

DIN

'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். 

இதனையடுத்து பிரபு தேவா நடிப்பில் பகீரா என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.

'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதையும் படிக்க: ‘ரஞ்சிதமே பாடலுக்கு கருவிலுள்ள குழந்தையும் அசைகிறது’- விடியோ பகிர்ந்து தமன் நெகிழ்ச்சி!
 
புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய சுனில் இப்படத்தில் இணைந்துள்ளார். தெலுங்கில் பிரபல காமெடினான சுனில், நாயகனாக சில படங்களில் நடித்தார். தற்போது, குணசித்தர வேடங்களில் கலக்கி வருகிறார். ஏற்கனவே, சிவகார்த்திகேயன், ஜெயிலர் படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலை / இரவு உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? - நம்பிக்கையும் உண்மையும்

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

ஜீத்து ஜோசப் உடன் ஷேன் நிகம்... மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

SCROLL FOR NEXT