முகப்பு
செய்திகள்

கீர்த்தி சுரேஷ்-நானி நடித்துள்ள ‘தசரா’ படத்தின் அப்டேட்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நடிகர் நானியுடன் நடித்துள்ள தசரா படத்தின்  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. அவரது முந்தைய படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நானி 'தசரா' எனும் புதிய படத்தில் நடித்து வந்தார். இதன் முதல் பார்வை போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தது. அப்போதிலிருந்தே இந்தப் படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. சுதாகர் செருகுரி தயாரித்து உள்ளார்.

இதில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மாநகரம், கைதி புகழ் சத்தியன் சூர்யன். 

இந்தப் படத்தின் டீசர் நாளை அறிவிக்கப்படுமெனவும் திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமெனவும் அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியென பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.