முகப்பு
செய்திகள்

தமிழக முதல்வரின் படத்தை டாட்டூ போட்டுக்கொண்ட விஷால்...

நடிகர் விஷால் தன் மார்பில் புதிதாக டாட்டூ போட்டுக்கொண்டுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

நடிகர் விஷால் தன் மார்பில் புதிதாக டாட்டூ போட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான ‘லத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஷால் பிரபல நடிகரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் படத்தை தன் மார்பில் டாட்டூவாக போட்டுள்ளார்.

விஷால் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இது உண்மையான டாட்டூவா இல்லை படத்திற்காக போடப்பட்டதா என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →