செய்திகள்

ஜெயம் ரவி படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா?

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான நிலையில் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் துறைமுகத்தில் படமாக்கப்பட்டதால் அங்கிருந்த பல்வேறு கண்டெய்னர்களில் இடம்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை மறைக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கண்டெய்னர்களில் இடம்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை சிஜியில் மாற்ற வேண்டி இருப்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT