தளபதி 67: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 67 படத்தைத் தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிடுகிறது. மாலை 6.07 மணி வரை காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.
இந்த சுட்டுரைப் பதிவின் எதிரொலியாக சமூக வலைதலங்கள் தளபதி 67 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும், லேகேஷ் கனகராஜின் எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டின் யூனிவர்ஸில் உள்ள மற்ற கதாபாத்திரங்களை இணைத்து தளபதி 67 குறித்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Advertisement
நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் கூட்டணி சேரவுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.