செய்திகள்

யார் கமலின் பெரிய ரசிகர்? இந்த சண்டையில் சட்டை கிழியாது: லோகேஷை புகழ்ந்த கௌதம் மேனன்! 

நடிகர் கமலின் தீவிர ரசிகர்- இயக்குநர் யார் என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் கௌதம் மேனன்தான் என பதிலளித்துள்ளார். 

DIN

காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் கவனத்தை ஈற்றவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈற்றுள்ளார். சமீபத்தில் தனியார் விருது விழாவில் லோகேஷ் கனகராஜை விட நான்தான் கமலின் தீவிர ரசிகர் என மணிகண்டன் மேடையில் பேசினார். இதற்கு லோகேஷ் கனகராஜ், “ சட்டையை கிழித்துவிட்டு சொல்வேன் நான்தான் கமல் சாரின் பெரிய ரசிகன்” என பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

சமீபத்தில் கமல்ஹாசன்- ஜோதிகா நடித்த கௌதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்தப் படம்தான் கமலின் ரசிகர் இயக்கியதிலேயே சிறந்த படமென ரசிகர் ஒருவர் ட்வீட் செய்யவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “சந்தேகமே வேண்டாம். ஜிவிஎம்சார்தான்” என பதிலளித்துள்ளார். 

இந்த பதிலுக்கு இயக்குநர் கௌதம் மேனன், “லோகேஷ் கனகராஜ் வரும் வரை அப்படி இருந்தது. ஆனால் நாயகன் மீண்டும் வரார் வந்த பிறகு (விக்ரம் படம்) அதுதான் டாப். அதை தாண்ட வேண்டும். நல்ல போட்டியாக இருக்கும் லோகேஷ். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிழியாது. அன்பு மட்டுமே” என ஜாலியாக கூறியுள்ளார். இதற்கு லோகேஷ் மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளதென கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வனப் பகுதியில் தவறி விழுந்த கா்ப்பிணி யானை உயிரிழப்பு

தமிழகத்தில் 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அன்பில் மகேஸ்

வனப் பகுதிக்குள் சுற்றுலா அழைத்துச் சென்ற எஸ்டேட் நிா்வாகத்துக்கு அபராதம்

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT