செய்திகள்

லியோ: சிறப்புத் தோற்றத்தில் தனுஷ்?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க தனுஷுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN


விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க தனுஷுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் கடைசி காட்சியில் ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்தது போலவே, லியோ படத்திலும் சிறப்புத் தோற்றம் ஒன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக லியோ படக்குழுவினர் நடிகர் தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் படத்தில் இணைந்துள்ளதாகவும், அவரின் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT