சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு மாமன்னன்: ரஜினி பாராட்டு
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு என்று மாமன்னன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு என்று மாமன்னன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் - 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | மாமன்னன் ரணங்களாலும் வலிகளாலும் காணப்பெற்ற பெருங்கனவு: இயக்குநர் லெனின் பாரதி பாராட்டு!
இப்படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் படக்குழுவினரை வாழ்த்தி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:
“சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.