பவன் கல்யாண் - அன்னா லெஷ்னேவா 
செய்திகள்

தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து விவாகரத்து!

தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப் பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். 

DIN


தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப் பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். 

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர தம்பதிகளான நாக சைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர்,

அதனைத் தொடர்ந்து தற்போது, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த நிஹரிகா - சைதன்யா தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். திருமணம் நடைபெற்று 3 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இருவரும் சம்மதத்துடன் பிரிவதாக தங்களின் சமூகவலைதளங்களில் அறிவித்துள்ளனர். 

இதேபோன்று தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவன் கல்யாணும் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர் ஏற்கெனவே இரு முறை விவாகரத்து பெற்றவர். அதனைத் தொடர்ந்து ரஷியாவைச் சேர்ந்த மாடலான அன்னா லெஷ்னேவாவை 3வதாக திருமணம் செய்துகொண்டார். 

தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பவன் கல்யாண் தனது 3வது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட பவன் கல்யாண், ஜனசேனா எனும் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT