செய்திகள்

குக் வித் கோமாளியில் இறுதிச் சுற்றுக்கு சென்ற போட்டியாளர்கள் யார் யார்? செம ட்விஸ்ட்!

குக் வித் கோமாளியில் இறுதிச் சுற்றுக்கு சென்ற போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

குக் வித் கோமாளியில் இறுதிச் சுற்றுக்கு சென்ற போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ், ஆன்ட்ரியன் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, சுருஸ்டி, கிரண் ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் விசித்ரா முதல் இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் இரண்டாவது  இறுதிப் போட்டியாளராக மைம் கோபியும், மூன்றாவது இறுதிப் போட்டியாளராக சிவாங்கியும், நான்காவது இறுதிப் போட்டியாளராக சுருஸ்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், யாரும் எதிர்பாராத விதமாக கிரண் ஐந்தாவது  இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிச் சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT