3 நாள்கள், 2 கோடி பார்வைகள்: இணையத்தை கலக்கும் காவாலா!
ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி மூன்று நாள்களில் 20 மில்லியன்(2 கோடி) பார்வைகளை கடந்துள்ளது.
ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி மூன்று நாள்களில் 20 மில்லியன்(2 கோடி) பார்வைகளை கடந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அனிருத் இசையில் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது.
Advertisement
Advertisement
‘காவாலா’ எனத் தொடங்கும் இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் வைரலான ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள காவாலா பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | நடுவழியில் நின்ற ரயில்.. இறங்கித் தள்ளும் ராணுவ வீரர்கள்! (விடியோ)
இந்நிலையில், காவாலா பாடல் வெளியாகி 3 நாள்களில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
யூடியூப், ஸ்பாடிஃபை போன்ற தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தை ‘காவாலா’ பாடல் தக்கவைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.