இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள்!
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராபி, அப்துல் அயாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பாபா ப்ளாக் ஷீப் திரைப்படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Advertisement
மேலும், நித்யானந்தம் இயக்கத்தில் ஆதித், வினிதா, அரவிந்த்ராஜ் நடித்துள்ள நேற்று நான் இன்று நீ திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: வேட்டையாடு விளையாடு வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!
கடந்த வாரம் ஜூலை 7 ஆம் தேதி 6 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த வாரம் ஜூலை 14 ஆம் தேதி 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.