செய்திகள்

சீதா ராமன் தொடர் புதிய நாயகியின் முதல் விடியோ!

நடிகை பிரியங்கா நல்காரி சீதா எனும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக சீதா ராமன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாததால், சீதா ராமன் தொடரிலிருந்து  வெளியேறினார்.

DIN

சீதா ராமன் தொடரில் புதிய நாயகியாக நடித்துவரும் ஸ்ரீ பிரியங்கா, சீதாவாக மாறிய பின் முதல் விடியோவை பதிவிட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரியங்கா நல்காரி சீதா எனும் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக சீதா ராமன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாததால், சீதா ராமன் தொடரிலிருந்து பிரியங்கா நல்காரி வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக சீதா பாத்திரத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்க ஒப்பந்தமானார். இவரின் காட்சிகள் தற்போது சீதா ராமன் தொடரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சீதா ராமன் படப்பிடிப்பு தளத்தில் சீதா வேடத்தில் இருக்கும் ஸ்ரீ பிரியங்கா ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார். சீதா ராமன் படப்பிடிப்பு தளத்தில் என் முதல் விடியோ என பதிவிட்டுள்ளார். 

சின்னத்திரை நாயகிகள் தான் நடிக்கும் தொடரின் பாத்திரத்தில் விடியோ வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நடிகை ஸ்ரீ பிரியங்கா வெளியிட்டுள்ள விடியோவுக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT