முகப்பு
செய்திகள்

சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சந்தானம் நாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைகொடுக்கவில்லை.

இதனால்,  அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார்.

பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘டிடி ரிட்டன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் பெயர் டீசரை படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் டிரைலர் நாளை(ஜூலை - 15) வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments