செய்திகள்

ஜெயிலர் 2வது பாடல்: இன்று மாலை முன்னோட்ட விடியோ! 

ஜெயிலர் படத்தின் 2வது பாடலின் முன்னோட்ட விடியோ இன்று மாலை வெளியாக உள்ளது.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம்  வெளியிட்டிருந்தது. 

இப்படம் ஆகஸ்ட்  10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. 

முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலானது. தற்போது இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடலின் முன்னோட்ட விடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளிவர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இதனால் ட்விட்டரில் ஜெயிலர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்த தருணம்... நந்திதா ஸ்வேதா

மௌனத்தில் காதல்... ராஷ்மிகா மந்தனா

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பந்தக்கால் நடும் விழா!

சொல்லாமலே... சாக்‌ஷி அகர்வால்!

காதலின் மொழி... அஹானா கிருஷ்ணா

SCROLL FOR NEXT