செய்திகள்

விஷால் 34: படப்பிடிப்பு துவக்கம்! 

நடிகர் விஷாலின் 34வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

DIN

நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014இல் வெளியான் பூஜை கலவையான விமர்சனங்களை பெற்றன. 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘விஷால் 34’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் படத்திற்கு பூஜை போடப்பட்டது. தற்போது படப்பிடிப்பு இன்று துவங்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

எம்.சுகுமார் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியளிக்க பாடலாசிரியர் விவேக் பாடல் எழுத உள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிர்சாந்த் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஷி மறுவெளியீட்டு டிரைலர்..! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

SCROLL FOR NEXT