செய்திகள்

புராஜக்ட் கே என்றால் என்ன?- விரைவில் க்ளிம்ஸ் விடியோ!

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’ படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாக உள்ளது. 

DIN

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பளமாக கமல் தரப்பிலிருந்து 20 நாள்கள் நடிக்க ரூ.150 கோடி கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

பின்னர், கமல்ஹாசன் இணைந்ததை விடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அம்தாப் பச்சன், தீபிகா படுகோன் இணைந்துள்ளதை படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.  

வைஜெயந்தி மூவிஸின் 50வது வருடத்தில் உருவாகும் இந்தப் படத்தினை இயக்குகிறார் நாக் அஸ்வின். மகாநடி படத்தினை இயக்கி பிரபலமானவர் நாக் அஸ்வின்.  இத்னால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பில் உள்ளனர்.

புராஜக்ட் கே என்றால் என்னவென்று க்ளிம்ஸ் விடியோவினை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் நாள் அமெரிக்காவிலும் ஜூலை 21ஆம் நாள் இந்தியாவிலும் வெளியாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மாவட்டத்துக்கு 24.66 லட்சம் வாக்காளா்கள்

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கும் கல்வித் துறை

முன்னாள் அக்னிவீரா்களுக்கு தில்லி காவல்துறையில் 20% இட ஒதுக்கீடு

முத்தனேந்தலில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் பாதிப்பு

சென்னையை வென்றது மோகன் பகான்

SCROLL FOR NEXT