கீர்த்தி சுரேஷின் கண்ணிவெடி!
நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் கண்ணிவெடி எனும் புதிய படம் உருவாக உள்ளது.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம், தசரா கீர்த்தியின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பினைப் பெற்றது.
Advertisement
Advertisement
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றுத்தந்தது.
ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது ட்ரீம் வாரியர்ஸின் 42வது படத் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு கண்ணிவெடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கணேஷ்ராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜே ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.