செய்திகள்

விம்பிள்டனில் மீண்டும் விஜய்: வைரலாகும் போஸ்டர்! 

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் போஸ்டரை எடிட் செய்து விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. 

DIN

2022இல் ரோஜர் ஃபெடரர் நடந்து வரும் புகைப்படத்தினை பதிவிட்டு விம்பிள்டன் தனது அதிகாரபூரவ பேஸ்புக் கணக்கில் “வாத்தி கம்மிங்” என பதிவிட்டு இருந்தது. பின்னர் சமீபத்தில் ரோஜர் ஃபெடரர் புகைப்படத்திற்கு “தலைவா” என பதிவிட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிப் போட்டியில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் முதல்முறையாக பட்டம் வென்றார். 

ஜாம்பவான்கள் பெற்றிருந்த அரியணையை முதன்முறையாக தனக்கு சொந்தமாக்கினார் காா்லோஸ் அல்கராஸ். இது இவரது முதல் விம்பிள்டன் பட்டமும் மொத்தமாக இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமும் ஆகும்.

இதற்காக விம்பிள்டன் நிர்வாகம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் போஸ்டரை எடிட் செய்து அதில் விஜய்-க்கு பதிலாக காா்லோஸ் அல்கராஸ் இருக்குமாறு பதிவிட்டு இருந்தது. அந்தப் பதிவில், “மாஸ்டர்... விம்பிள்டனின் புதிய மாஸ்டர்” என ட்வீட் செய்யப்பட்டு இருந்தது. 

இந்தப் பதிவிற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “புதிய பிராண்ட் லியோ. மாஸ்டர் விஜய் சார்” என ட்வீட் செய்துள்ளார். நடிகர் விஜய் இதன்மூலம் உலக அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறார். 

லோகேஷ் இயக்கி வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு! விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளா் ஊதிய குறைபாடு சீா் செய்யப்படும்: திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

1,043 தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி! அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்!

ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம்!

பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT