செய்திகள்

துருவ நட்சத்திரம் 2வது பாடல்: எத்தனை மணிக்கு தெரியுமா?

விக்ரம் நடிப்பில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் 2வது பாடல் நாளை காலை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

DIN

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள். 

இருப்பினும், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போன நிலையில், சமீபத்தில் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜும் இப்படத்தின் இசைக்கான பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.

முதலில் படத்தில் பாடல்கள் இல்லாமல் இருந்தது. தற்போது மாண்டேஜ் சீனுக்காக பாடல்கள் தயாரித்து வருவதாக இயக்குநர் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT