பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ’தெறி’ படம் 2016இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. சமந்தா, எமி ஜாக்ஸன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 68 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: மாவீரன் 4 நாள் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தொடர்ந்து, தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தயாரிப்பு உரிமையைப் பெற்ற அட்லி அப்படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவானை நடிக்க வைக்கிறார். இதனை, ஜீவா நடித்த ‘கீ’ படத்தினை இயக்கிய காளிஸ் இயக்குகிறார்.
இந்நிலையில், வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருண் தவானின் 18வது படம் என்பதால் தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘விடி18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.